யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 16 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008   ( 13:22 IST )
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலியாகினர். 40க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்துவருகின்றனர். ங்கு பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகள் அந்த பகுதியில் அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே, தீவிரவாதிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கை பழங்குடியின மக்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால், தங்களது பகுதியிலிருந்து தீவிரவாதிகளை வெளியேற்றுவது குறித்து விவாதிப்பதற்காக பழங்குடியின மக்களின் ஆலோசனைக் கூட்டம் ஓராக்ஷாய் என்ற இடத்தில் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

கூட்டம் நடந்துக் கொண்டிருந்தபோது, மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் திடீரென இந்த கூட்டத்துக்குள் புகுந்து, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில், பழங்குடியினர் 16 பேர் உடல்சிதறி பலியாகினர். 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும், அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், போதிய மருத்துவ வசதி இல்லாததால் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து!
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; 16 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...