யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி ஒப்பந்தம்: பிரணாப் - ரைஸ் கையெழுத்திட்டனர்
வாஷிங்டன் (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 09:04 IST )
இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ்சும் கையெழுத்திட்டனர். இதன் மூலம், இன்று முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.

இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்தன. இதை தொடர்ந்து, அதற்கான சட்ட வரைவில் அதிபர் புஷ்சும் இரு தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டார்.

ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோர் இன்று அதிகாலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால், அணுசக்தி ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பிரணாப் முகர்ஜி கூறுகையில், "இது ஒரு முக்கியமான நாள். இரு நாடுகளின் பொறுப்புகளும், உரிமைகளும் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமான கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்துகிறது" என்றார்.

அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ் கூறுகையில், "இது ஒரு சிறப்பான நாள். இந்த ஒப்பந்தம் நிறைவேறாது என்று நினைத்தவர்கள் இன்று அமைதியாகிவிட்டனர். எவ்வித திருத்தமும் செய்யப்படாமல் அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது" என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2005ம் ஆண்டு மத்தியில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அதிபர் புஷ்சுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை தொடங்கினார்.

இதன் பின்னர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி ற்போது ஒப்பந்தம் வெற்றிகரமாக அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து!
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; 16 பேர் பலி
வேதியியல் நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
தமிழக அரசியல் கட்சிகளுக்கு புலிகள் நன்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...