|
| அணுசக்தி: பிரணாப்- ரைஸ் இன்று கையெழுத்து! |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 11:00 IST ) | |
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று கையெழுத்திடுகின்றனர். இதன் பின், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன.
இதை தொடர்ந்து, அதிபர் புஷ்சும் நேற்று அதிகாலை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.05 மணியளவில் புஷ் கையெழுத்திட்டார்.
அடுத்தக்கட்டமாக, இந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கையெழுத்திட வேண்டும். இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையின் சிறப்பு வாய்ந்த கிழக்கு அறையில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் ஆகியோர் கையெழுத்திடுகின்றனர்.
அவர்கள் கையெழுத்திட்டதும், அணுசக்தி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து அணு மூலப்பொருட்கள், அணுசக்தி தொழிற்நுட்பம் மற்றும் அதற்கான உபகரணங்களை பெறும் நடவடிக்கைகளை இந்தியா தொடங்கும்.
இதன் மூலம், பல்வேறு தடைகளை தாண்டி இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் வெற்றிகரமாக அமலுக்கு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|