யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு ; 16 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 9 அக்டோபர் 2008   ( 16:24 IST )
பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த இரு வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 16 பேர் பலியானார்கள்.பலர் காயமடைந்தனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறப்பகுதியில் அமைந்துள்ள காவல் துறை தலைமையகம் அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

போலீஸ் தலைமையக வளாகத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு கட்டடம் அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் 8 பேர் காயமடைந்ததாகவும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்ததாகவும் காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து வடமேற்கு மாகாணமான டிர் மாவட்டத்தில் கைதிகலை ஏற்றிச் சென்ற வேனை குறி வைத்து, ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் சிக்கிக் கொண்டது.

இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள், 4 போலீஸார் மற்றும் 3 கைதிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மேயர் தாரிகுல்லா தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடயே இந்த குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதல் என்றும், இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேதியியல் நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
தமிழக அரசியல் கட்சிகளுக்கு புலிகள் நன்றி
123 ஒப்பந்தத்தில் முகர்ஜி - ரைஸ் நாளை கையெழுத்து
அணுசக்தி ஒப்பந்தம்: புஷ் கையெழுத்திட்டார்!
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் இன்று கையெழுத்து!
இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...