|
| வேதியியல் நோபல் பரிசு: 3 பேர் தேர்வு! |
ஜெல்லிமீனில் இருந்து பல வண்ண பசுமைப் புரதத்தை கண்டறிந்ததற்காக 2008ம் ஆண்டின் வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசுக்காக ஓர் ஜப்பானியர் மற்றும் 2 அமெரிக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அறிவியலுக்கான ராயல் ஸ்வீடன் அகடமி வெளியிட்டுள்ள அறிக்கை:
2008 ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசுக்காக, ஜப்பானைச் சேர்ந்த ஒசாமு ஷிமோமுராவும், அமெரிக்காவின் மார்டின் சல்ஃபி மற்றும் ரோஜர் செய்னும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இகோரியா விக்டோரியா என்ற வகை ஜெல்லி மீனில் இருந்து கடந்த 1962ல் பல வண்ண பசுமைப் புரதம் கண்டறியப்பட்டது. அன்று முதல் உயிரி அறிவியில் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் வண்ண பசுமைப் புரதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. இதன் உதவியால் மூளை நரம்பின் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்களில் பரவும் தன்மையை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.
வட அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதியில் காணப்படும் இகோரியா விக்டோரியா என்ற ஜெல்லிமீனின் உடலில் இருந்து இந்த பல வண்ண பசுமைப் புரதத்தை ஒசாமு ஷிமோமுரா பிரித்தெடுத்தார். (ஜப்பானை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்).
இந்த வகை புரதங்கள் மீது ஊதாக் கதிர்களை செலுத்தினால் அவை பச்சை நிறத்தை உமிழும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.
இதேபோல் உயிரி அறிவியிலின் பல்வேறு ஆய்வுகளுக்கு, மருத்துவச் சோதனைகளுக்கும் இந்த புரதம் பயன்படும் என்பதை மார்டின் சல்ஃபி நிரூபித்தார். இதற்காக ஒளி ஊடுருவும் ஒருவித மண்புழுவின் உடலில் உள்ள 6 தனி செல்களுக்கு வண்ணமூட்டிக் காட்டினார்.
மற்றொரு விஞ்ஞானியான ரோஜர் செய்ன் இந்த புரதத்தின் பொதுவான குணநலன்களைக் கண்டறிந்தார். அதுமட்டுமின்றி அதன் பச்சை நிறத்தை பல்வேறு வகை நிறங்களாக மாற்றும் முயற்சியிலும் அவர் வெற்றி கண்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|