|
| தமிழக அரசியல் கட்சிகளுக்கு புலிகள் நன்றி |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008 ( 15:00 IST ) | |
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழினம் மீதான இலங்கை அரசின் இன அழிப்புப் போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்தப் போரில் இலங்கைத் தமிழர்கள் படும் அவலங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்க எவரும் இல்லையென்ற இறுமாப்புடன் இலங்கை அரசு போர் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இப்போருக்கு ஏதிராக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஒற்றுமையுணர்வுடன் குரல் கொடுத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. ஒன்றுதிரண்டு ஒருமித்த உணர்வுடன் தமிழக கட்சிகள் தமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும்.
கடல் தாண்டிக் கரம் நீட்டும் தமிழக மக்களின் இன உணர்வை நன்றியுடன் பற்றிக்கொள்கின்றோம். இதற்காக மகிழ்ச்சி அடைவதோடு இலங்கைத் தமிழரின் சுதந்திரப் போராட்டத்திற்கு தமிழக மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவையும் உதவிகளையும் எதிர்பார்க்கிறோம்.
தமிழகத் தலைவர்கள் காட்டிவரும் இந்தத் தார்மீக ஆதரவு, செயல்வன்மை மிக்க அரசியல் ஆதரவாக முழுமைபெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|