யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் இன்று கையெழுத்து!
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 8 அக்டோபர் 2008   ( 18:32 IST )
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அதை சட்டமாக்கும் வரைவில் அதிபர் புஷ் இன்று கையெழுத்திடுகிறார்.

இந்திய - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தன. இந்த மசோதா சட்டமாக வேண்டும் எனில், அதில் அதிபர் புஷ் கையெழுத்திட வேண்டும். அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர்.

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான இந்த சட்ட வரையில், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.20 மணிக்கு அதிபர் புஷ் இன்று கையெழுத்திடுகிறார்.

அதன் பின்னர் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வரும் 10ம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா வருகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேர் தேர்வு!
அணுசக்தி ஒப்பந்த சட்டம்: புஷ் நாளை கையெழுத்து!
ஐ.நா. பொதுச் செயலர் விரைவில் இந்தியா பயணம்
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...