யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சரப்ஜித் விடுதலை பற்றி ஜர்தாரி முடிவுசெய்வார்: பரூக்
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008   ( 17:52 IST )
'தூக்குத் தண்டனை கைதி சரப்ஜித் சிங்கின் விடுதலை குறித்து அதிபர் ஜர்தாரி முடிவு செய்வார்' என்று சட்ட அமைச்சர் பரூக் நாயக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த தூக்குத் தண்டனை கைதி சரப்ஜித் சிங்கை சட்ட அமைச்சர் பரூக் நாயக் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, சரப்ஜித் சிங்கின் வழக்கு விவகாரம் குறித்து பரூக் கேட்டறிந்தார்.

பின்னர் இது குறித்து அவர்ச் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரப்ஜித்சிங் வழக்கு விவகாரம் மற்றும் தண்டனை குறித்து ஆய்வு செய்து, அதிபர் ஜர்தாரியிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.

சரப்ஜித் சிங்கை விடுவிப்பது குறித்து அதிபர் ஜர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர் முடிவு செய்வர்.

இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகளை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்ய இந்தியாவும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் கடந்த 1990ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்து செய்யப்பட்ட சரப்ஜித் சிங்குக்கு, நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

கடந்த ஏப்ரல் 1ல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய அதிபர் முஷாரப் ஒரு மாதம் காலம் தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

பின்பு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் கிலானி தலையிட்டு, சரப்ஜித்தின் தண்டனையை மீண்டும் தள்ளி வைத்தார்.

இந்நிலையில், மனித நேய அடிப்படையில் சரப்ஜித்சிங்கை விடுவிக்கும்படி இந்திய அரசு கோரிக்கை விடுத்ததை ஏற்று, அவரது தூக்குத் தண்டனை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆப்கானிஸ்தான், சீனாவில் நிலநடுக்கம்!
உணவு பஞ்சத்திற்குமிடையேயும் ஆயுதம் வாங்கிய வட கொரியா
எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல்
ஆப்கான் - தாலிபான் அமைதி பேச்சு
சரப்ஜித்துடன் பாக். சட்டஅமைச்சர் இன்று சந்திப்பு!
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...