|
| எச்.ஐ.வி.யைக் கண்டுபிடித்தவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் |
| ஸ்டாக்ஹோம் (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008 ( 16:12 IST ) | |
ஜெர்மெனியின் ஹெரால்ட் ஸுர் ஹவ்சன், பிரான்ஸின் ஃபிரான்காய்ஸ் பெர்ரி சினவ்ஸி மற்றும் லுக் மோன்டோக்னியர் ஆகியோர் 2008-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
இதனை செய்தியாளர்களிடம் இன்று அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "கருப்பை வாய் புற்றுநோய்க்குக் காரணமான ஹ்யூமன் புபிலோமா வைரஸ்களைக் கண்டுபிடித்த ஜெரிமெனியின் ஹெரால்ட் ஸுர் ஹவ்சன் மற்றும் எச்.ஐ.வி. வைரஸைக் கண்டுபிடித்த பிரான்ஸின் ஃபிரான்காய்ஸ் பெர்ரி சினவ்ஸி, லுக் மோன்டோக்னியர் ஆகியோருக்கு 2008-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது," என்று அறிவித்துள்ளது.
இதில், மொத்த பரிசுத் தொகையில் அரைப் பகுதி ஜெர்மெனியின் ஹவ்சென்னுக்கும், பிரான்ஸின் சினவ்ஸி மற்றும் மோன்டோக்னியர் ஆகியோருக்கு தலா கால் பகுதி அளவும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஹெரால்ட் ஸுர் ஹவ்சன் (பிறப்பு : 1936)
ஜெர்மெனியின் ஹீடில்பெர்க்கிலுள்ள ஜெர்மென் புற்றுநோய் ஆய்வு மையத்தைச் சேர்ந்தவரே, ஹெரால்ட் ஸுர் ஹவ்சன்.
கருப்பை வாய் புற்றுநோய்க்குக் காரணமான ஹ்யூமன் புபிலோமா வைரஸ்களைக் கண்டுபிடித்ததற்காகவே, நடப்பாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது.
ஃபிரான்காய்ஸ் பெர்ரி சினவ்ஸி (1947), லுக் மோன்டோக்னியர் (1932)
பிரான்ஸைச் சேர்ந்த ஃபிரான்காய்ஸ் பெர்ரி சினவ்ஸி மற்றும் லுக் மோன்டோக்னியர் ஆகிய இருவரும்தான், உலகின் கொடிய நோயாம் எய்ட்ஸுக்கு காரணமான எச்.ஐ.வி. (ஹ்யூமன் இம்முனோ டிஃபிஷியன்ஸி வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள்.
ஸ்வீடன் அகாடெமி நாளை (செவ்வாய்க்கிழமை ) இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும், புதன்கிழமை வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன. வரும் 9-ம் தேதியன்று இலக்கியத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, வரும் 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முறையே அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகிறது.
ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|