யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கான் - தாலிபான் அமைதி பேச்சு
லண்டன் (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008   ( 15:40 IST )
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக வூதி மன்னர் ஏற்பாட்டின் பேரில் அவரது முன்னிலையில் தாலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்குமிடையே அமைதி பேச்சு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதியில் அமைந்துள்ள மெக்கா நகரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றதாகவும், இந்த பேச்சு வார்த்தையில் ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் இரண்டு பேரும், தாலிபான்கள் தரப்பில் 11 பேரும், முஜாகிதீன் ஓயக்கத்தின் முன்னாள் தளபதி குல்பதீன் மற்றும் மூவரும் கலந்து கொண்டதாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு நெருக்கமான வட்டாரத்தை மேற்கொள்காட்டி, சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் இந்த பேச்சுவார்த்தையில் தாலிபான் தலைவர் முல்லா ஒமரும் பங்கேற்றதாக வெளியான செய்தியை தாலிபான்கள் தரப்பில் மறுத்துள்ளனர்.மேலும் அல் - காய்தாவுடன் தாலிபான் தலைவர்களுக்கு இனி எந்த தொடர்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, அந்த அரசை அங்கீகரித்த 3 நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாக இருந்தது.ஆனால் பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்குமாறு சவுதி மன்னர் விடுத்த கோரிக்கையை ஏற்க முல்லா ஒமர் மறுத்துவிட்டதால், அப்போதிருந்து இருதரப்புக்குமிடையேன உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித்துடன் பாக். சட்டஅமைச்சர் இன்று சந்திப்பு!
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் : 25 பேர் பலி
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
அணுசக்தி ஒப்பந்தம் : அக்.8-ல் புஷ் கையெழுத்து
ரஷ்ய ஆயுதக் கிடங்குகளிலிருந்து 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...