யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சரப்ஜித்துடன் பாக். சட்டஅமைச்சர் இன்று சந்திப்பு!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008   ( 13:23 IST )
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை கைதியான ரப்ஜித்தை அந்நாட்டு ட்ட அமைச்சர் பரூக் நாயக் இன்று ந்தித்துப் பேசுகிறார்.

கடந்த 1990ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் எனக் கூறி, இந்தியரான சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்து, சிறையில் அடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அதன்படி, கடந்த ஏப்ரல் 1ம் தேதியே சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய அதிபர் அதிபர் முஷாரப், தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்தார்.

அதன் பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சரப்ஜித் சிங்கின் தண்டனையை ஒத்தி வைத்தது.

அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிரின் பிறந்த நாளையொட்டி, 'கைதிகளின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்' என்று அறிவித்த பிரதமர் யூசுப் ரஸா கிலானி, மறு உத்தரவு வரும் வரை சரப்ஜித் சிங்கின் தண்டனையை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சரப்ஜித்சிங்குக்கு கருணை காட்டும்படி, இந்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, சட்ட அமைச்சர் பரூக் நாயக் இன்று லோக்பாத் சிறையில் சரப்ஜித்சிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோருக்கு அறிக்கை அனுப்புகிறார். அதன் பின்னரே, சரப்ஜித்சிங்கின் விடுதலை குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் : 25 பேர் பலி
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
அணுசக்தி ஒப்பந்தம் : அக்.8-ல் புஷ் கையெழுத்து
ரஷ்ய ஆயுதக் கிடங்குகளிலிருந்து 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...