யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் : 25 பேர் பலி
கொழும்பு (ஏஜென்சி), 6 அக்டோபர் 2008   ( 10:47 IST )
இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள அனுராதபுரம் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், முன்னாள் ராணுவத் தளபதி உள்பட 25 பேர் பலியாயினர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அனுராதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவின்போது, இன்று காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில், வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் ராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா மற்றும் அவரது மனைவி உள்பட 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தற்கொலைத் தாக்குதலை, தமிழீழ விடுதலைப்புலிகளே நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்பதாக, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர், அனுராதபுரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் பலரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில், அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான டாக்டர். ஜோன்புள்ளேயும் அவரது மனைவியும் அடங்குவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ராணுவ தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா, விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிர்கிஸ்தானில் பூகம்பம் : 58 பேர் பலி
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
அணுசக்தி ஒப்பந்தம் : அக்.8-ல் புஷ் கையெழுத்து
ரஷ்ய ஆயுதக் கிடங்குகளிலிருந்து 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
பாக்.கில் யு.எஸ். படை தாக்குதல் ; 20 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...