|
| பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி |
| நியூயார்க் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2008 ( 13:40 IST ) | |
தமது நாட்டுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருபவர்கள், பயங்கரவாதிகளே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஒருவர் மேற்குறிப்பிட்டவாறு கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'வால் ஸ்ட்ரீட்' ஜர்னல் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "பாகிஸ்தானுக்கு ஓர் அச்சுறுத்தலாக ஒருபோதும் இந்தியா இருந்ததில்லை. இதனால், இந்தியாவின் செல்வாக்கினைக் கண்டு எங்களது நாடு அஞ்சவில்லை," என்று கூறினார்.
காஷ்மீரில் நிகழ்ந்து வரும் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "அங்கே தாக்குதல் நடத்தி வருபவர்கள் பயங்கரவாதிகளேயன்றி, சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லர்," என்றார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த்தை தாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள சர்தாரி, இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள, பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|