யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அணுசக்தி ஒப்பந்தம் : அக்.8-ல் புஷ் கையெழுத்து
வாஷிங்டன் (ஏஜென்சி), 5 அக்டோபர் 2008   ( 12:11 IST )
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த சட்ட மசோதாவில், அதிபர் ஜார்ஜ் புஷ் இம்மாதம் 8 -ம் தேதி (புதன்கிழமை) கையெழுத்திடுகிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து, பின்னர் அதனை ஆதரித்து செனட் சபையில் அறிமுகப்படுத்திப் பேசிய ஜனநாயக கட்சி உறுப்பினர் ஹோவர்ட் பெர்மான் பெயரில் ஹெச் ஆர் 7081 எனப் பெயரிடப்பட்ட இந்த சட்ட மசோதாவில் அதிபர் புஷ் புதன்கிழமை கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெள்ளை மாளிகை அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மசோதாவில் புஷ் வரும் புதன்கிழமை கையெழுத்திடுகிறார். அதையடுத்து, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.

முன்னதாக, இந்தியாவுக்கு நேற்று வருகைபுரிந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸ், சில நிர்வாகப் பணிகள் காரணமாக, அணுசக்தி ஒப்பந்த மசோதாவில் புஷ் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரைஸின் இந்திய பயணத்தின்போதே அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான உடன்பாட்டில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கையெழுத்திடுவார்கள் என கூறப்பட்டது.

ஆனால், எரிபொருள் விநியோகம் தொடர்பான அம்சங்களில் சில தெளிவான உத்தரவாதத்துடன் கூடிய அறிக்கையுடன் புஷ்சின் கையெழுத்து இடம் பெற வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதால், அணு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாகிஸ்தானுக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் இல்லை: சர்தாரி
ரஷ்ய ஆயுதக் கிடங்குகளிலிருந்து 2.15 லட்சம் துப்பாக்கிகள் மாயம்
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
பாக்.கில் யு.எஸ். படை தாக்குதல் ; 20 பேர் பலி
பாக்.குடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது: அமெரிக்கா
இந்தியாவுடன் நட்புறவு நிலைக்க யு.எஸ். விரும்புகிறது: ரைஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...