யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
யு.எஸ்.: அணு ஒப்பந்தம் இன்று பார்லி.யில் தாக்கல்!
வாஷிங்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008   ( 11:49 IST )
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு 45 நாடுகளை கொண்ட அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் (என்.எஸ்.ஜி) ஒப்புதல் அளித்துள்ளன. அடுத்தக் கட்டமாக அமெரிக்கா நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அமெரிக்க அதிபர் புஷ்சின் பதவிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறுகிறது. இதனால், தனது பதவிக் காலத்துக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் புஷ் உறுதியாக உள்ளார்.

இந்நிலையில், புஷ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் இன்று தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த குறுகிய காலத்துக்குள், அணு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெற்றாக வேண்டும். இதனால், இந்த ஒப்பந்தத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கும்படி எம்.பி.க்களை புஷ் கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.

அதன்படி, நாடாளுமன்றத்தில், இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் இன்று தாக்கல் செய்யப்படும். இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் ஒப்புதல் வழங்கப்படும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாதம் அமெரிக்கா வருகிறார். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். இதன் பின்னர், மிக விரைவில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக். குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 30ஐ தாண்டியது!
பாக்.அதிபர் தேர்தலில் சர்தாரி வெற்றி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி
யு.எஸ்.நிதி :பாக்.கிடம் கணக்கு கேட்கிறார் ஒபாமா
பாக். அதிபர் தேர்தல்; வாக்குப் பதிவு துவங்கியது
எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூட்டத்தில் இழுபறி; பேச்சுவார்த்தை நீட்டிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...