|
| பாக்.அதிபர் தேர்தலில் சர்தாரி வெற்றி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 16:50 IST ) | |
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஆசிப் அலி சர்தாரி, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் 700 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.
இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) சார்பில் அதன் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத்-சமன் சித்திக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) சார்பில் முஷாஹித் ஹுசைன் சையத் ஆகியோர் போட்டியிட்டனர்.
மாலை 3 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில்,4 மாகாண சபைகள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றிலும், நாடாளுமன்றத்திலும் இரு சபைகளிலும் கூட்டாக இன்று நடந்த வாக்குப்பதிவை அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் முஹம்மது பரூக் மேற்பார்வையிட்டார்.
வாக்குப்பதிவுமுடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாலை 3.45 மணியளவில் பி.பி.பி. கட்சியின் இணை தலைவரும், அதிபர் வேட்பாளருமான ஆசிப் அலி சர்தாரி,தம்மை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களைவிடவும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் பதிவான வாக்குகளில் 426 வாக்குகளில் செல்லத்தக்கவை என்றும், இதில் சர்தாரிக்கு 281 வாக்குகள் கிடைத்ததாகவும் பரூக் அறிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|