யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 16:12 IST )
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானார்கள் ; மேலும் பலர் காயமடைந்தனர்.

பெஷாவர் நகரின் புறப்பகுதியில் உள்ள பதபெர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனைச் சாவடியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அந்த சாவடி முற்றிலும் அழிக்கப்பட்டது.

மேலும் அருகிலுள்ள இரண்டு மார்க்கெட் பகுதிகளும், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 15 வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களது உடல்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் சிதறிக் கிடந்தன.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், இன்று பாகிஸ்தானில் நடைபெறும் அதிபர் தேர்தலை மனதில்கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ்.நிதி :பாக்.கிடம் கணக்கு கேட்கிறார் ஒபாமா
பாக். அதிபர் தேர்தல்; வாக்குப் பதிவு துவங்கியது
எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூட்டத்தில் இழுபறி; பேச்சுவார்த்தை நீட்டிப்பு
பா‌கி‌ஸ்தானுட‌ன் நெரு‌க்கமான உறவு: அமெ‌ரி‌க்கா உறுதி
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நிலநடு‌க்க‌ம்
பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: இலங்கை படை‌யின‌ர் 4 பே‌ர் ப‌லி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...