|
| யு.எஸ்.நிதி :பாக்.கிடம் கணக்கு கேட்கிறார் ஒபாமா |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008 ( 13:51 IST ) | |
தீவிரவாதத்திற்கு எதிரான போருக்காக அமெரிக்காவால் வழங்கப்படும் நிதியை, இந்தியாவுக்கு எதிரான போருக்கு தயார்படுத்துவதற்காக பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது என அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா குற்றம் சாற்றியுள்ளார்.
'ஃபாக்ஸ் நியூஸ்' க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது :
அமெரிக்க அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்கா அளித்த ராணுவ நிதியுதவிக்கு பாகிஸ்தான் முறையான கணக்கு காண்பிக்குமாறு கோருவேன்.மேலும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள வடமேற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருப்பதற்கு முடிவுகட்டுமாறும் பாகிஸ்தான் அரசுக்கு கொடுக்கும் நிர்ப்பந்தத்தை எனது நிர்வாகம் அதிகரிக்கும்.
அத்துடன் ஆப்கானிஸ்தான் மீது கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நிர்ப்பந்தத்தை அதிகரிப்போம்.
அல் - காய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகளை எனது நிர்வாகமும் தொடரும் என்றாலும், பாகிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பாமலேயே பின்லேடன் அழிக்கப்படுவான்.
மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரிலிருந்து எனது நிர்வாகம் பின்வாங்காது.அத்துடன் அடிப்படைவாதிகளின் கைகளில் பாகிஸ்தான் நிர்வகம் போய்விடாதவாறும் பார்த்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|