|
| பாக். அதிபர் தேர்தல்; வாக்குப் பதிவு துவங்கியது |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 11:41 IST ) | |
பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.
மொத்தம் 700 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை நடக்கிறது.
வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கிய நிலையில், உறுப்பினர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி) சார்பில் அதன் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரியும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) சார்பில் முன்னாள் தலைமை நீதிபதி சயீத்-சமன் சித்திக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) சார்பில் முஷாஹித் ஹுசைன் சையத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அந்நாட்டின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பி.பி.பி க்கு நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும், மேலும் பல சிறிய கட்சிகளை பி.பி.பி தனது வசம் இழுத்துள்ளதாலும், அதிபர் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் சர்தாரிக்கு 60 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அவர் அதிபர் ஆவது உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|