|
| என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இழுபறி; பேச்சுவார்த்தை நீட்டிப்பு |
| வியன்னா (ஏஜென்சி), 6 செப்டம்பர் 2008 ( 08:56 IST ) | |
அணு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி முன்மொழியப்பட்டுள்ள தீர்மான வரைவின் மீது அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவின் (என்.எஸ்.ஜி.) இரண்டு நாள் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட, என்.எஸ்.ஜி.யின் சில உறுப்பு நாடுகள் கடுமையாக மறுத்து வரும் சூழலில், தீர்மான வரைவுக்கு ஒப்புதல் பெறுவதில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களாக நடந்த நெடிய பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனவே, இன்று (சனிக்கிழமை) மாலையில் மீண்டும் கூடுவது என, என்.எஸ்.ஜி. நாடுகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் ஆயுத கட்டுப்பாட்டு விவகார செயலர் (பொறுப்பு) ஜான் ரூட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான நடவடிக்கையில் நாள் முழுவதும் ஈடுபட்டோம். அணு ஆயுத பரவல் தடுப்பு குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்க ஒன்றாகும்," என்றார்.
"அணு ஆயுத பரவல் தடுப்பு பற்றி இந்தியா புதிதாக வெளியிட்டுள்ள அறிக்கையால் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இன்று ஒப்புதல் கிடைத்துவிடும் என உறுதியாக தெரிகிறது," என்றார் அவர்.
அணு வர்த்தகத்தில் இந்தியா ஈடுபடுவதற்காக, என்.எஸ்.ஜி.யின் 45 உறுப்பு நாடுகளிடம் இருந்து ஒப்புதல் பெறுவதில் வகை செய்வது என்பதில் தாம் உறுதிபூண்டுள்ளதாக, அமெரிக்க தரப்பு தெரிவிக்கிறது.
இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்ற ஜான் ரூட், "நம்முடைய இலக்கை அடைந்துவிடுவதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்றார்.
முன்னதாக, 'அணு ஆயுத சோதனை தொடர்பாக தனக்கு தானே விதித்துக்கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை, இந்தியா முழுமையாகப் பின்பற்றும்' என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று உறுதியளித்தார்.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகை செய்யும் என்.எஸ்.ஜி. நாடுகளுடனான அணு வர்த்தகத்துக்கு இன்று ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|