|
| புலிகள் தாக்குதல்: இலங்கை படையினர் 4 பேர் பலி |
| கிளிநொச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008 ( 15:41 IST ) | |
விடுதலைப் புலிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் இலங்கை அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர்.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள முகாமிற்குச் சென்று கொண்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினரின் வாகனம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் இலங்கை படையினர் 3 பேர் பலியானதாகவும், 10 பேர் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக கூறி புதினம் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்தவர்களில் ஒருவர் அதிரடிப் படையைச் சேர்ந்த உயரதிகாரி என்றும், அவர் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதனிடையே கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர் மீதும் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|