|
| எல்லையில் தாக்குதல் : யு.எஸ்.தூதரிடம் பாக்.கண்டனம் |
| இஸ்லாமாபாத்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 17:10 IST ) | |
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பாகிஸ்தான் பகுதிக்குள் அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியில் உள்ள வாசிர்ஸ்தான் என்ற இடத்தில் தாலிபான்கள் பதுங்கியிருப்பதாக கூறி அமெரிக்க படையினர் நேற்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீசி தாக்கினர்.
இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், எவ்வித முன்னறிவுப்புமின்றி பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி அன்னே பேட்டர்ஸனை, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமத் சாதிக் தெரிவித்தார்.
இதனிடையே இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|