|
| கிலானி மீது தாக்குதல்: தாலிபான் பொறுப்பேற்பு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 12:36 IST ) | |
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மீது மர்ம ஆசாமிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். ராவல்பிண்டி அருகே அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். எனினும், கிலானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக. உயர்மட்ட அளவில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாதிகள் பொறுபேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக, கடந்த வாரம் தடை செய்யப்பட்ட அம்பர்லா தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் முஸ்லிம்கான் கூறுகையில், 'இந்த தாக்குதலை தாலிபான் தீவிரவாதிகளே நடத்தினர். இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்திலும் தொடரும்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|