யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இ‌ந்‌தியா‌வுக்கு ‌வில‌க்கு : எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் இன்று துவக்கம்
வியன்னா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008   ( 12:10 IST )
அணு வர்த்தகத்தில் இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி வழ‌ங்குவ‌தி‌ல் ‌சில நாடுக‌ள் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌நிலை‌‌யி‌ல், இறு‌தி முடி‌வினை எடு‌ப்பத‌ற்கான அணு எரிபொருள் வழங்கும் நாடுக‌ள் குழுவின் (எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.) இரண்டு நாள் கூட்டம் இன்று வியன்னாவில் தொடங்குகிறது.

கடந்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில், இ‌ந்‌தியா சா‌ர்பாக ௦அமெ‌ரி‌க்கா மு‌ன் வை‌த்த வரை‌வி‌ன் ‌மீது 15 உறுப்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.

இதையடுத்து, என்.எஸ்.ஜி. நாடுகளுடன் அணு வர்த்தகம் மே‌ற்கொ‌ள்வதற்கு இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வில‌க்குட‌ன் கூடிய அனும‌தி கோ‌ரி முன்வைக்கப்பட்ட வரைவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்த திருத்தம் செய்யப்பட்ட வரைவு குறித்து விவாதித்து, இன்று தொடங்கும் என்.எஸ்.ஜி. நாடுகள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரைவின் மீதும்கூட அதிருப்தி வெளியிட்டுள்ளதால், அணு ஆயுத‌ப் பரவ‌‌ல் தடை உட‌ன்படி‌க்கை விவகாரம் குறித்து அந்நாடுகள் கேள்வி எழுப்பும் எனத் தெரிகிறது.

அணு ஆயுத‌ப் பரவ‌‌ல் தடை உட‌ன்படி‌க்கை‌யி‌ல் கையெழு‌த்‌திடாத இ‌ந்‌தியா‌ திருத்தியமைத்துள்ள வரைவு முழுமையானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் இல்லை என்றும், தா‌ங்க‌ள் கூ‌றிய நிப‌ந்தனைக‌ள் அ‌தி‌ல் சே‌ர்‌க்க‌ப்பட‌வி‌ல்லை என்றும் அதிருப்தி நாடுகள் கூறியுள்ளன.

முன்னதாக, இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அமெரிக்க அதிபர் புஷ் அரசின் 26 பக்க ரகசிய ஆவணம் வெளியானதைத் தொடர்ந்து, அதுபற்றி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றிரவு புதுடெல்லியில் நடைபெற்றது.

அமெரிக்க அரசின் ஆவணத்தின் வாயிலாக, இந்தியா அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டால், அணு எரிபொருள் வழங்குவது மற்றும் ஏனைய ஒத்துழைப்புகளும் நிறுத்தப்பட்டுவிடும் என்ற அமெரிக்காவின் நிபந்தனை விவரம் தெரியவந்துள்ளது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் பேசுகையில், "அணு ஆயுத சோதனை நடத்த நமக்கு உரிமையுண்டு. அதுபற்றி கருத்துகூற அமெரிக்காவுக்கு உரிமையுண்டு," என்றார்.

அதேபோல், அணுகுண்டு சோதனை விவகாரத்தில், தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று இந்திய வெளியுறவு அமைச்சகமும் திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தொடர் கலவரம்: தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுப்பு
இந்தியா அணுகுண்டு சோதனை செய்தால் சப்ளை நிறுத்தம்:யு.எஸ்.
பாக். பிரதமரை கொல்ல முயற்சி ; துப்பாக்கிச் சூடு
இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வில‌க்கு : நாளை எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம்
தாலிபான்கள் பிடியில் 2 சீன என்ஜினியர்கள்
ஜப்பான் பிரதமர் ராஜினாமா!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...