|
| தொடர் கலவரம்: தாய்லாந்து பிரதமர் பதவி விலக மறுப்பு |
| பாங்காக் (ஏஜென்சி, வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 12:10 IST ) | |
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்துவரும் நிலையில், தான் பதவி விலகப்போவதில்லை என்று பிரதமர் சமாக் சுந்தரவேஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தாக்-ஷின் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தண்டனை பெற்றுள்ளார்.
இவருக்கு ஆதரவாக தற்போதைய பிரதமர் சாமக் சுந்தரவேஜும் செயல்பட்டு வருவதாக ஜனநாயகத்திற்கான ஒருங்கிணைந்த மக்கள் அமைப்பு (PAD) குற்றம் சாட்டி வருகிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பினர் கடந்த 26ம் தேதி முதல் பிரதமர் அலுவலக வளாகத்தில் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பிரதமரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது.
இதனால், பிரதமரால் தனது அலுவலகத்துக்குள் கூட நுழையமுடியவில்லை. இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் ஒருவர் பலியானார். இதனால் தலைநகர் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் ஓர் தேசிய அவமானம் என்றும், இதனால் பிரதமர் விரைவில் பதவி விலகுவார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், வானொலி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் சாமக் சுந்தரவேஜ், "நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே எனது கடமை. எக்காரணம் கொண்டும் நான் பதவி விலகப்போவதில்லை" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|