|
| பாக்:கில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 15:21 IST ) | |
பாகிஸ்தானில் போலீஸ் வேனை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தில், சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் இன்று காலை ஒரு வேனில் அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள பான்னு என்ற பாலம் அருகே வேன் வந்தபோது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் வேனில் இருந்த 9 பேர் பலியாகினர்.
இதில் பெரும்பாலானோர் கைதிகளுக்கு பாதுகாப்பாக சென்ற போலீசார். வேனில் இருந்த பல கைதிகள் படுகாயமடைந்தனர். போலீஸ் வேனை குறிவைத்த இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
போலீஸ் வேன் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|