யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக்: 8 நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 20:42 IST )
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரபால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 நீதிபதிகளை அரசு மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரபின் ஆட்சிக் காலத்தில் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்பட 60 நீதிபதிகள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

நாட்டில் முஷாரப்புக்கு எதிர்ப்பு அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட 60 நீதிபதிகளில், 8 பேருக்கு இன்று மீண்டும் பதவி வழங்கப்பட்டது.

சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 8 நீதிபதிகளுக்கும் கராச்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

எனினும் பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக இருந்த இப்திகார் சவுத்ரிக்கு மீண்டும் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

முஷாரபால் நீக்கப்பட்ட நீதிபதிகளை, மீண்டும் பதவியில் அமர்த்தாததைக் காரணம் காட்டி பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சி விலகிய இரு தினங்களில் 8 நீதிபதிகளுக்கு அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அனைவரும் அடுத்தடுத்து பணியில் அமர்த்தப்படுவர் என்று கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீன ரசாயன தொழிற்சாலையில் தீ: 18 பேர் பலி!
சூடா‌ன் விமானக் கடத்தல்: பயணிகள் விடுவிப்பு
துபாய் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி
விடுதலைப்புலிகள் மீண்டும் விமான தாக்குதல்
இந்தோனேஷிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
நவாஸ் ஷெரீப்புக்கு சர்தாரி மீண்டும் அழைப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...