|
| சீன ரசாயன தொழிற்சாலையில் தீ: 18 பேர் பலி! |
| பீஜிங் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 15:56 IST ) | |
சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் பிரபல ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. நேற்று அதிகாலை 6 மணியளவில் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் திடீரென வெடித்துச் சிதற ஆரம்பித்தன.
இதனால் அங்கு மதியம் 1 மணிவரை அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால், சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தொடர்ந்து தீ எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த கோர விபத்தில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலரை காணவில்லை. 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரசாயன ஆலையில் இருந்து வெளியாகும் விஷ வாயு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், ஆலைக்கு அருகே வசித்த 11 ஆயிரத்து 500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்புப் படையினர் தீயணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|