|
| சூடான் விமானக் கடத்தல்: பயணிகள் விடுவிப்பு |
| திரிபோலி (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 15:44 IST ) | |
சூடானிலிருந்து லிபியாவுக்கு கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர்.
சூடான் நாட்டின் தெற்கு தர்பர் தலைநகர் நயாலாவில் இருந்து, தலைநகர் கார்ட்டூமுக்கு 'போயிங் 737' ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. விமானத்தில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிகள் வேடத்தில் அமர்ந்திருந்த சில தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினர். அந்த விமானத்தை லிபியா தலைநகர் டிரிபோலிக்கு கொண்டுசென்றனர்.
விமானத்தை தாங்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும், அதற்கு தேவையான எரிபொருள் நிரப்பும்படியும் அதிகாரிகளிடம் கூறிய கடத்தல்காரர்கள், விமானத்தை மீட்க முயற்சித்தால் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கடத்தல்காரர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் விமானப் பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களை விடுவிக்க மறுத்துவிட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
விமானத்தை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|