யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
விடுதலைப்புலிகள் மீண்டும் விமான தாக்குதல்
கொழும்பு(ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 09:37 IST )
இலங்கையில் திரிகோணமலையில் உள்ள அந்நாட்டு டற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று திடீரென நடத்திய விமானத் தாக்குதலில் கடற்படை வீரர்கள் 18 பேர் காயம் அடைந்ததனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதியை கைப்பற்றிய ராணுவம், அவர்கள் வசம் இருக்கும் வடக்குப் பகுதியையும் பிடிக்க கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

எனினும் ராணுவத்தினரை தங்கள் பகுதிகள் முன்னேற விடாமல் விடுதலைப்புலிகள் ஆவேசமாக சண்டையிட்டு வருகின்றனர்.

வவுனியா, கிளிநொச்சி, மன்னார் போன்ற வடக்கு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது.விடுதலைப்புலிகளின் சில இடங்களை கைப்பற்றி விட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திரிகோணமலை கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகள் நேற்று திடீரென விமான தாக்குதல் நடத்தினர்.

நேற்று இரவு 9.05 மணி அளவில் விடுதலைப்புலிகளின் போர் விமானம் ஒன்று திரிகோணமலை துறைமுகத்தில் உள்ள கடற்படை தளம் மீது பறந்து வந்து,கண்ணிமைக்கும் நேரத்தில் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

அந்த குண்டுகள் மிக பலத்த சத்தத்துடன் கடற்படை தளத்தில் விழுந்து வெடித்தது.

இதனையடுத்து அந்த விமானத்தை குறி வைத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டன. இருப்பினும் புலிகளின் போர் விமானம் மின்னல் வேகத்தில் தாக்குதலை நடத்திவிட்டு, லாவகாமாக அங்கிருந்து சென்று விட்டது.

கடற்படை தளம் மீது விடுதலைப்புலிகளின் விமானம் 2 குண்டுகளை வீசியதாகவும், இந்த தாக்குதலில் கடற்படை வீரர்கள் 18 பேர் காயம் அடைந்ததாகவும் இலங்கை ராணுவ அமைச்சரகம் கூறி உள்ளது.

இந்த தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

கொழும்பில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திரிகோணமலை துறைமுகம், இலங்கை கடற்படையின் முக்கிய தளமாக விளங்குகிறது. வடக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டு வரும் ராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்கள், இங்கிருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தோனேஷிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
நவாஸ் ஷெரீப்புக்கு சர்தாரி மீண்டும் அழைப்பு!
பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!
பாக்.கில் தாக்குதல்: யு.எஸ். தூதர் உயிர்தப்பினார்!
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஆதரவை விலக்கிக் கொண்டது நவாஸ் கட்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...