|
| இந்தோனேஷிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ் |
| ஜகார்த்தா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 26 ஆகஸ்டு 2008 ( 17:11 IST ) | |
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று காலை 10.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருந்தது.
கடல் பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், சுனாமி பேரலைகள் உருவாவதற்காக அறிகுறிகள் எதுவும் தென்படாததால் அடுத்த 30 நிமிடங்களில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உள்ளனர்.
இந்தோனேஷியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளில் சிக்கி சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|