யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நவாஸ் ஷெரீப்புக்கு சர்தாரி மீண்டும் அழைப்பு!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 26 ஆகஸ்டு 2008   ( 17:10 IST )
பாகிஸ்தான் முஸ்லீம் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப்பிடம் வருத்தம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் சர்தாரி, கூட்டணிக்கு மீண்டும் வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி, தங்களுடன் செய்துகொண்ட கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறி நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் (என்) கட்சி கூட்டணியிலிருந்து நேற்று வெளியேறியது.

இதை தொடர்ந்து தங்களது நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ள சர்தாரி, மீண்டும் கூட்டணிக்கு வரும்படி நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தொலைகாட்சியான பி.டி.வி யில் சர்தாரி ஆற்றிய உரை : நவாஸ் ஷெரீப் கட்சியுடன் இணைந்து புதிய பிரதமரை தேர்வு செய்தோம். ஓர் சர்வதிகாரியை (முஷாரப்) தோற்கடித்தோம். ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்தோம்.

எதிர்பாராத விதமாக, இந்த பயணத்தை தொடர நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார்.சில தனிப்பட்ட விஷயங்களில் அவர் மனம் புண்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.

ஜனநாயகம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் நலன் கருதி மீண்டும் அவர் கூட்டணிக்கு திரும்பவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!
பாக்.கில் தாக்குதல்: யு.எஸ். தூதர் உயிர்தப்பினார்!
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஆதரவை விலக்கிக் கொண்டது நவாஸ் கட்சி
அடுத்த பிரிட்டிஷ் மன்னர் வில்லியம்ஸ் சார்லஸ் ?
நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி : நவாஸ் கோரிக்கையை ஏற்றார் சர்தாரி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...