யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். குண்டுவெடிப்பில் 3 பேர் பலி!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 26 ஆகஸ்டு 2008   ( 16:01 IST )
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்; 25க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாண ஆளுனராக இருந்தவர் நவாப் அக்பர் பாகி. ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்த இவர், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், குகைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்.

கடந்த ஆண்டு இதே தினத்தில், ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியபோது, குகை இடிந்து விழுந்து இவர் மரணமடைந்தார்.

வரது நினைவுத் தினத்தையொட்டி, அவரது கட்சியினர் இன்று ஜாபராபாத்தில் பேரணி நடத்தினர். பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், பொதுக்கூட்ட மேடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, இன்று காலை வெடித்துச் சிதறியது. ரிமோட்டை இயக்கி இந்த குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.

இதில், கட்சித் தொண்டர்கள் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 25க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் தாக்குதல்: யு.எஸ். தூதர் உயிர்தப்பினார்!
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஆதரவை விலக்கிக் கொண்டது நவாஸ் கட்சி
அடுத்த பிரிட்டிஷ் மன்னர் வில்லியம்ஸ் சார்லஸ் ?
நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி : நவாஸ் கோரிக்கையை ஏற்றார் சர்தாரி
பா‌க் : தாலிபான்கள் ரா‌க்கெ‌ட் தா‌க்குத‌லில் 10 பே‌ர் ப‌லி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...