யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜகார்தா (ஏஜென்சி), 26 ஆகஸ்டு 2008   ( 10:43 IST )
இந்தோனேஷியாவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு ஜாவா தீவு கடல் பகுதியில் இன்று காலை 10.07 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

எனினும், இதுவரை ராட்சத அலைகள் தோன்றவில்லை என்றும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகளில் சிக்கி சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆதரவை விலக்கிக் கொண்டது நவாஸ் கட்சி
அடுத்த பிரிட்டிஷ் மன்னர் வில்லியம்ஸ் சார்லஸ் ?
நீதிபதிகளுக்கு மீண்டும் பதவி : நவாஸ் கோரிக்கையை ஏற்றார் சர்தாரி
பா‌க் : தாலிபான்கள் ரா‌க்கெ‌ட் தா‌க்குத‌லில் 10 பே‌ர் ப‌லி
சர்தாரிக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்கிறார் நவாஸ்
பாக்.கில் தாலிபான்கள் கை ஓங்கியுள்ளது : சர்தாரி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...