|
| இந்திய அணு வர்த்தகம் : என்.எஸ்.ஜி. நாடுகள் இன்று முடிவு |
| வியன்னா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 12:28 IST ) | |
இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் மேற்கொள்வது ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கு, அணு எரிபொருள் வழங்கும் குழு (என்.எஸ்.ஜி.) நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று வியன்னாவில் தொடங்குகிறது.
இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அடிப்படையாக அமைந்துள்ள ஐஏஇஏ என்று அழைக்கப்படும் பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தத்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வகை செய்வதற்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் உடன் அணுசக்தி வர்த்தகம் மிகவும் முக்கியமாகும்.
அந்த 45 என்.எஸ்.ஜி. நாடுகளுடன் அணுசக்தி வர்த்தகம் மேற்கொள்வதற்கு, வல்லரசு நாடுகள் தவிர ஏனையவை அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டிருக்க வேண்டியது அவசியம்.
ஆனால், தம்மை அணு ஆயுத நாடாக அங்கீகரித்திட வேண்டும் என்று கோரிவரும் இந்தியா, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருகிறது.
எனவே, என்.எஸ்.ஜி. நாடுகளுடன் அணு எரிபொருள் மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வகை செய்யும் வகையில், தமக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இதற்கென, என்.எஸ்.ஜி. நாடுகளுடன் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவுக்காக ஆதரவு திரட்டி வருகிறது.
இந்தச் சூழலில்தான், இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், இதற்காக விலக்கு அளிப்பது பற்றியும் முடிவு செய்வதற்காக, என்.எஸ்.ஜி. நாடுகள் இன்று வியன்னாவில் கூடுகின்றன.
அணுசக்தி வர்த்தகத்துக்கு ஒப்புதல் தெரிவிக்க, சில என்.எஸ்.ஜி. நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுச் செயலர் சிவ சங்கர் மேனன் நேற்று தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் விளக்கமளித்தார்.
என்.எஸ்.ஜி. நாடுகளிடம் இருந்து அணு எரிபொருள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு ஒப்புதல் பெற முடியாமல் போய்விட்டால், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த்தை நடமுறைப்படுத்துவது கேள்விக்குறியாகிவிடும் என்பது கவனிக்கத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|