யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி
மாட்ரிட் (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 08:49 IST )
ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.

இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த அந்நாட்டின் மேம்பாட்டு அமைச்சர் மக்தேலனா அல்வாரெஸ், இந்த விபத்தில் 19 பேர் உயிர் பிழைத்தனர் என்றும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில், மொத்தம் 172 பேர் பயணம் செய்ததாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாட்ரிட்டிலுள்ள பராஜஸ் விமான நிலையத்தில் இருந்து எம்.டி.-82 விமானம் நேற்று மாலை புறப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, பின்னர் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

விமானம் நொறுங்கியது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இது விபத்து தான் என உறுதியாக தெரியவந்துள்ளதாக, ஸ்பெயின் அமைச்சர் மக்தேலனா மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு ஒப்பந்தம்: 3 என்.எஸ்.ஜி. நாடுகளிடம் பேசுகிறார் மேனன்
பாக்.கை விட்டு வெளியேற மாட்டேன் : முஷாரப்
பாக். அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஷர்தாரி!
எந்த நாட்டுக்கு செல்வது? : முஷாரப் யோசனை
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி
ஆப்கான் : அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த முயற்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...