|
| பாக்.கை விட்டு வெளியேற மாட்டேன் : முஷாரப் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 13:53 IST ) | |
பாகிஸ்தானை விட்டு தாம் வெளியேறப் போவதாக வெளியான செய்தியை பர்வேஸ் முஷாரப் மறுத்துள்ளார்.
அதிபர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் விலகிய முஷாரப்,சவுதி அரேபியாவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து அமெரிக்காவில் சொந்த தொழில் செய்து வரும் தனது மகனுடன் சென்று குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்த செய்தியை முஷாரப் மறுத்துள்ளார்.இது அடிப்படை ஆதாரமல்லாத செய்தியாகும் என அவர் கூறியுள்ளார்.
அதிபர் பதவியை தாம் ராஜினாமா செய்தது தமது தோல்வியை பிரதிபலிக்காது என்றும், பாகிஸ்தான் மற்றும் அதன் மக்களின் நலன் கருதியே தாம் பதவி விலகியதாகவும் முஷாரப் தெரிவித்துள்ளார் என்று இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானைவிட்டு வெளியேறும் எண்ணம் ஏதும் தமக்கு இல்லை என்றும் முஷாரப் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|