யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். அதிபர் பதவிக்கு தகுதியானவர் ஷர்தாரி!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 13:28 IST )
'பாகிஸ்தானின் புதிய அதிபர் பதவிக்கு தகுதியானவர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆசிப் அலி ஷர்தாரிதான்' என்று முக்கிய எதிர்கட்சித் தலைவர் அல்டாப் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் நேற்று முன்தினம் விலகியதையடுத்து, புதிய அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப் கட்சி இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாட்டின் புதிய அதிபர் பதவிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவருமான ஷர்தாரிதான் தகுதியானவர் என்று முக்கிய எதிர்கட்சியான எம்.கியூ.எம். கட்சித் தலைவர் அல்டாப் ஹூசேன் தெரிவித்துள்ளார்.

முன்பு ஆளும் கட்சியாக இருந்த எம்.கியூ.எம்., கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து, தற்போது எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எந்த நாட்டுக்கு செல்வது? : முஷாரப் யோசனை
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி
ஆப்கான் : அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த முயற்சி
பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...