யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
எந்த நாட்டுக்கு செல்வது? : முஷாரப் யோசனை
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 19 ஆகஸ்டு 2008   ( 18:04 IST )
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷாரப் விரைவில் மெக்கா செல்கிறார். னி எந்த நாட்டில் வசிப்பது என்பது குறித்து அப்போது முடிவு செய்கிறார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொடர் நெருக்கடி காரணமாக, அதிபர் பதவியிலிருந்து விலகிய முஷாரப், மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்கிறார்.

பதவி விலகியதுமே வெளிநாடு புறப்பட்டால், சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து ஓடிவிட்டதாக வதந்தி கிளம்பிவிடும் என்பதால், சில நாட்கள் பாகிஸ்தானில் இருந்துவிட்டு அதன் பின்னர் புறப்படுகிறார்.

மெக்கா புனிதப் பயணம் முடிந்ததும், அமெரிக்கா சென்று அங்குள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகே, எந்த நாட்டில் வசிப்பது என்பது குறித்து முஷாரப் முடிவு செய்கிறார்.

பதவியில் இருந்து விலகிய பின்னரும், பாதுகாப்பாக பாகிஸ்தானில் வசிக்கவே முஷாரப் விரும்பினார்.

ஆனால், பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயமாக பாதுகாப்பு இருக்காது என்று நெருங்கிய நண்பர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, நாட்டை விட்டே வெளியேற தயாராகிவிட்டார் முஷாரப்.

பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் எதிரிகளை சம்பாதித்துவிட்ட நிலையில், எந்த நாட்டில் 'செட்டில்' ஆனால் பாதுகாப்பாக இருக்கும் என்பதே முஷாரப்பின் தற்போதைய முழுநேர யோசனையாக இருப்பதாக கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 20 பேர் பலி
ஆப்கான் : அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த முயற்சி
பங்காளதேஷ் : நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு
பாக். புதிய அதிபர் யார் ? : இன்று ஆலோசனை
முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...