|
| முஷாரப் விலகல்: ஒபாமா, மெக்கைன் வரவேற்பு |
| வாஷிங்டன் (ஏஜென்சி, 19 ஆகஸ்டு 2008 ( 12:38 IST ) | |
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகியதை, அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளர்களான பாரக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கைன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கை:
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப் விலகியது சரியான முடிவு. இதன் மூலம் பாகிஸ்தான் மக்களின் விருப்பப்படி, அந்நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, கூட்டணி அரசு நிலைப்பு தன்மை பெறும்.
இதன் மூலம் அமெரிக்கா, 'முஷாரப் கொள்கையிலிருந்து 'பாகிஸ்தான் கொள்கை'க்கு மாறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அங்குள்ள தீவிரவாதம், உணவு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடியரசு கட்சி வேட்பாளரான ஜான் மெக்கைன் கூறுகையில், "முஷாரப் பதவி விலகியிருப்பதன் மூலம் அங்கு அரசியல் ஸ்திர தன்மை ஏற்பட்டுள்ளது. அல்-காய்தா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் முக்கிய தளமாக இருந்த பாகிஸ்தானை, அந்நாட்டு அரசு வரும் காலத்தில் நட்பு நாடாக உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|