|
| முஷாரப் ராஜினாமா: சவூதியில் தஞ்சம் அடைகிறார்! |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 14:33 IST ) | |
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொடர் நெருக்கடி காரணமாக, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், சவூதி அரேபியாவில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பதவி விலகும்படி வலியுறுத்தி, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை வரை கெடு விதித்திருந்தன.
இந்த கெடுவுக்குள் அவர் பதவி விலகிவிட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில், அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்யப்படும் என்றும், அப்படி நடந்தால் அவர் மீது சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று பிடிவாதம் செய்து வந்து முஷாரப், பின்னர் மிரட்டலுக்கு பணிய ஆரம்பித்தர்.
அதன்படி, இன்று மதியம் 1 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உருக்கமாக உரை நிகழ்த்தினார். அப்போது, தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.
முஷாரப்பின் உரை:
நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 9 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்ட நான் இன்று முக்கிய முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.
எனக்கு எதிராக சிலர் அடிப்படை ஆதாரம் இல்லாத தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இது மிகவும் துரதிஷ்டவசமானது.
கடந்த 8 ஆண்டுகளில் பொருளாதாரம் சிறந்த முறையில் மேம்பாடு அடைந்துள்ளது. அனைத்து வகைகளிலும் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளேன்.
என்னை விரட்ட முயல்பவர்கள் நாட்டையே ஏமாற்ற முயல்கின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
நான் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தினேன். நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்கச் செய்தேன்.
அப்படி தேர்தலில் வென்றவர்கள், இப்போது எனக்கு எதிராகவே காய் நகர்த்துகிறார்கள். என்னை பழிவாங்க முயல்கிறார்கள்.
எனக்கு எதிராக எந்த கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். ஆனால், என் மீதான எந்த கண்டனத் தீ்ர்மானமும் நிற்காது,
ஆனால், இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுவிடும்.
எனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தேன். பாகிஸ்தானை உலகரங்கில் மிக முக்கியமான இடத்துக்கு கொண்டு செல்ல முயன்றேன். உலகளவில் பாகிஸ்தான் குரலை ஒலிக்க வைக்க முயன்றேன். ஆனால், அரசியல் சதி காரணமாக அது தோல்வியில் முடிந்துவிட்டது.
எனது ஆட்சிக் காலம் மூலம் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக மிக கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்தேன். இந்த நம்பிக்கையில் எனது அதிபர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பிவிட்டேன்.
அரசு கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும். பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். அனைத்து பிரச்சனைகளுமே தீர்க்கக் கூடியவைதான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பதவி விலகியதை தொடர்ந்து, முஷாரப் சவூதி அரேபியாவில் தஞ்சம் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் எச்சரிக்கைக்கு பணிந்து, முஷாரபே பதவி விலகிவிட்டதால் அவர் மீது சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|