யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். அதிபர் முஷாரப் பதவி விலகினார்!
இஸ்லாமாபாத் (ஏஜென்சி ), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008   ( 14:01 IST )
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இன்று பதவி விலகினார்.

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரபுக்கு, அரசு நாளை வரை கெடு கொடுத்திருந்தது.

இந்நிலையில், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் முஷாரப் தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கிறார். இதில், தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

அவரது உரையில் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக நான் மிகவும் நேர்மையாக பாடுபட்டேன். இன்றைய நாள் என் வாழ்வில் முக்கியமான நாள்; முடிவெடுக்கும் நாள்.

பாகிஸ்தானின் கொள்கைகளை நிலைநிறுத்தியதற்காக நான் பெருமைப் படுகிறேன். என்னை பதவியிறக்க துடிப்பவர்கள், நாட்டையே ஏமாற்றுகின்றனர். எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

நாட்டை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி சென்றிருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறிப்பாக கடந்த 8 மாதங்களாகதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகியவை மோசமடைந்துள்ளன.

கடந்த 9 ஆண்டுகளாக நாட்டுக்காக மிகக் கடுமையாகவும் நேர்மையாகவும் பாடுபட்டேன். அந்த நம்பிக்கையுடன் அதிபர் பதவியிலிருந்து நான் விலகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டு மக்களிடம் தொடர்ந்து உரையாற்றி கொண்டிருக்கிறார் முஷாரப்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள பிரதமராக பிரசாந்தா இன்று பதவி ஏற்பு
நாளை வரை கெடு: முஷாரப் இன்று முடிவு?
' பதவி விலகாவிட்டால் முஷாரப் மீது குற்றச்சாற்று பதிவு '
திபெத்தியர்கள் சித்ரவதை : தலாய் லாமா புகார்
அடுத்த பாக். அதிபர் பெண்ணாக இருக்கலாம் : சர்தாரி
நேபாளத்தில் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் : பிரச்சண்டா
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...