|
| நேபாள பிரதமராக பிரசாந்தா இன்று பதவி ஏற்பு |
| காத்மாண்டு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 11:10 IST ) | |
நேபாள பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்ட மாவோயிஸ்டு தலைவர் பிரசாந்தா இன்று பதவியேற்கிறார்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அரசியல் நிர்ணயசபைக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்தமாதம் 19ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, இந்திய வம்சாவளியினரான ராம்பரன் யாதவ் வெற்றிப் பெற்றார். நாட்டின் முதல் அதிபராக கடந்த 23ம் தேதி ராம்பரன் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, பிரதமருக்கான தேர்தல் கடந்தவாரம் நடந்தது. இதில், மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் புதிய பிரதமராக இன்று அவர் பொறுப்பேற்கிறார்.
பிரசாந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மாவோயிஸ்ட் கட்சி, நேபாள மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதேசி கட்சி ஆகியவை இடம் பெறுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|