யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நாளை வரை கெடு: முஷாரப் இன்று முடிவு?
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008   ( 10:43 IST )
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி அரசு நாளை வரை கெடு விதித்துள்ள நிலையில், இதுகுறித்து முஷாரப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பதவி விலகும்படி வலியுறுத்தி, ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை வரை கெடு விதித்துள்ளன.

இந்த கெடுவுக்குள் அவர் பதவி விலகிவிட்டால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், அவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்து பதவி நீக்கம் செய்யபப்டும் என்றும், அதன் பிறகு அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்றும், தனக்கு எதிரான கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ள போவதாகவும் முஷாரப் தெரிவித்துள்ளார்.

நாளையுடன் முஷாரபுக்கு கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடையவுள்ள நிலையில், முஷாரப் தற்போது புதிய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி, இன்று மதியம் 1 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தவுள்ளார். அப்போது, தனது ராஜினாமா தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' பதவி விலகாவிட்டால் முஷாரப் மீது குற்றச்சாற்று பதிவு '
திபெத்தியர்கள் சித்ரவதை : தலாய் லாமா புகார்
அடுத்த பாக். அதிபர் பெண்ணாக இருக்கலாம் : சர்தாரி
நேபாளத்தில் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் : பிரச்சண்டா
மலேசியா : எதிர்கட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல்
பாக். அதிபர் பதவிலிருந்து விலக முஷாரப் மறுப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...