யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நேபாளத்தில் மூடப்பட்ட ஆலைகள் திறக்கப்படும் : பிரச்சண்டா
காத்மாண்டு (ஏஜென்சி), சனிக்கிழமை, 16 ஆகஸ்டு 2008   ( 18:58 IST )
நேபாளத்தில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் மூடப்பட்ட தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் விரைவில் திறக்கப்படும் என அந்நாட்டின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரச்சண்டா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் முதல் பிரதமராக மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரச்சண்டா நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

முதல் பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று மாலை நடந்த வாக்கெடுப்பில் பிரச்சண்டா 438 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இந்நிலையில், காத்மாண்டுவில் தொழிலதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரச்சண்டா, மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் மூடப்பட்ட ஆலைகள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க தனது அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

சரக்குந்து ஓட்டுனர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் மூடப்பட்ட கிழக்கு நேபாளத்தில் உள்ள நெடுஞ்சாலை திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரச்சண்டா உறுதியளித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற தொழிலதிபர் ஒருவர் கூறியுள்ளார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலேசியா : எதிர்கட்சித் தலைவர் வேட்பு மனு தாக்கல்
பாக். அதிபர் பதவிலிருந்து விலக முஷாரப் மறுப்பு
சுதந்திர தினம்: அமெரிக்கா வாழ்த்து!
சுதந்திர தினம் : 35 இந்தியர்களை விடுவிக்கிறது பாக்.
நாட்டில் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுவிட்டது : பாக். பிரதமர்
பாக். : தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...