யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பாக். அதிபர் பதவிலிருந்து விலக முஷாரப் மறுப்பு
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்டு 2008   ( 18:03 IST )
பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலக மறுத்துள்ள முஷாரப், தனக்கு எதிரான கண்டன தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரபை நீக்கும் நடவடிக்கைகளில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதற்கு கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

அடுத்தவாரம், நாடாளுமன்றத்தில் முஷாரப்புக்கு எதிராகண்டன தீர்மானம் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் முஷாரப் தானாக முன்வந்து பதவி விலகினால் அவருக்கு உரிய இழப்பீடும், பாதுகாப்பும் அளிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தனக்கு எதிராக நெருக்கடி அதிகரித்து வருவதால் தானாகவே பதவி விலக முஷாரப் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் தற்போது மறுத்து வருகிறார். தனது மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும், இதனால் தனக்கு எதிரான கண்டன தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) உள்ளிட்ட தனது கூட்டணி கட்சிகளுடன் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தான் பதவி விலகப் போவதில்லை என்ற தகவலை முஷாரப் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சுதந்திர தினம்: அமெரிக்கா வாழ்த்து!
சுதந்திர தினம் : 35 இந்தியர்களை விடுவிக்கிறது பாக்.
நாட்டில் சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டுவிட்டது : பாக். பிரதமர்
பாக். : தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலி
சீனா‌வி‌ல் பேரு‌ந்து க‌வி‌ழ்‌ந்து 24 பே‌ர் ப‌லி!
லெபனானில் குண்டு வெடிப்பு : 18 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...