யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இடைத் தேர்தல் தோல்வி: பிரவுனுக்கு பின்னடைவு!
லண்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 14:09 IST )
பிரிட்டனில் நடந்த இடைத் தேர்தலில் பிரதமர் கார்டன் பிரவுனின் கட்சி தோல்வியடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டனின் புதிய பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்றார்.

அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தல், லண்டன் மேயர் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் கார்டன் பிரவுனின் தொழிலாளர் கட்சி தொடர் தோல்விகளை தழுவியது.

இந்நிலையில், கிழக்கு கிளாஸ்கோ பகுதிக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட மார்க்கரெட் கர்ரன் 10,912 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்காட்டிஸ் தேசியவாத கட்சி (எஸ்என்பி) வேட்பாளர் ஜான் மேசோன் 11,277 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.

இதுகுறித்து, ஜான் மேசோன் கூறுகையில், "பிரதமர் கார்டன் பிரவுன், பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போனதையே இந்த தோல்வி காட்டுகிறது. அந்த கட்சியை பொருத்தவரை, இந்த தோல்வி ஓர் 'அரசியல் பூகம்பம்'" என்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஏற்பட்டு வரும் இந்த தொடர் தோல்விகள், கார்டன் பிரவுனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆப்கானிஸ்தானில் மோதல்: 34 தாலிபான்கள் பலி
123 அணு ஒப்பந்தத்தை எதிர்க்க 60 நாடுகளுக்கு பாக். கடிதம்
புதிய கொலைப் பட்டியலைத் தயாரித்துள்ள பாக். தாலிபான்
அணுசக்தி: நட‌ப்பு கூ‌ட்ட‌தொட‌ரில் அமெ‌ரி‌க்கா ஒ‌ப்புத‌ல்!
நேபாள அதிபருக்கு சிவராஜ் பாட்டீல் வாழ்த்து!
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: 100 பேர் காயம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...