|
| 123 அணு ஒப்பந்தத்தை எதிர்க்க 60 நாடுகளுக்கு பாக். கடிதம் |
| வியன்னா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 15:58 IST ) | |
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கக் கோரி, உலகின் 60 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
இதுதொடர்பான கடிதம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அணுசக்தி முகமையுடனான இந்தியாவின் கண்காணிப்பு ஒப்பந்தத்துக்கு, அந்த முகமையில் உறுப்பினராகவுள்ள 35 நாடுகள் ஒப்புதல் தெரிவிக்கவுள்ள நிலையில், இரு வாரங்களுக்கு முன்பாகவே 60 நாடுகளுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வதேச அணுசக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தம் அடிப்படையாகும்.
மேலும், 45 நாடுகளில் இருந்து அணு எரிபொருள்களை இந்தியா வாங்குவதற்கு வழிவகை செய்யும் என்பதாலும், கண்காணிப்பு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
'கண்காணிப்பு ஒப்பந்தமானது, அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை பாதிப்பதோடு, இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போட்டி அதிகரிக்கும் அபாயம் உண்டு,' என ஜூலை 18-ம் தேதி, சர்வதேச அணுசக்தி முகமை வாரிய உறுப்பினர்கள் மற்றும் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|