|
| புதிய கொலைப் பட்டியலைத் தயாரித்துள்ள பாக். தாலிபான் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 15:36 IST ) | |
அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளிலுள்ள 300 பேர் கொண்ட கொலைப் பட்டியலை (ஹிட் லிஸ்ட்), பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினரின் தலைவர் பைதுல்லா மேஹசுத் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகள் உஷார் நிலையில் செயல்படுவதற்கு முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தக் கொலைப் பட்டியலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, அவாமி தேசிய கட்சி, முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள், தாலிபான்களுக்கு எதிராக செயல்படும் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர் என பாகிஸ்தான் உளவுத்துறைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உளவு மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், மாகாண அமைச்சர்கள் மற்றும் செய்தியாளர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பத்தினர் ஆகியோரையும் தாக்குவதற்கு, தெர்கி - இ - தாலிபான் அமைப்பினர் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக, பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்களை மறுக்காத சிஐடி தலைவர் செளத் மிர்சா, "அனைத்து உளவு அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்," என்றார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை படுகொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் அமைப்பினரே, தெர்கி - இ - தாலிபான் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|