|
| நேபாள அதிபருக்கு சிவராஜ் பாட்டீல் வாழ்த்து! |
| காத்மாண்டு/ புதுடில்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 10:43 IST ) | |
நேபாளத்தின் முதல் அதிபராக பொறுப்பேற்றுள்ள ராம்பரன் யாதவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி அரசியல் நிர்ணய சபைக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து நேபாளம் ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 19ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம்பரன் யாதவ், மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ராம் ராஜா பிரசாத் சிங் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.
யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மாதேஷி மக்கள் உரிமைக் கழகம் ஆகியவை ராம்பரன் யாதவுக்கு ஆதரவு தெரிவித்தன.
இதனால், அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் நேபாளத்தின் முதல் அதிபராக அவர் பதவியேற்று கொண்டார். அவருக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மன்னராட்சியில் இருந்து விடுபட்டு, ஜனநாயக நாடாக மலர்ந்துள்ளதன் மூலம் நேபாளத்தில் தற்போது புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|